வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி! பாஜகவினர் ஆரவாரம்!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம்  வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

இன்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் காலை நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை பெற்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி பின்னாடி வை சாதித்த தகவல் நாடு முழுவதும் பெரும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த அஜய் ராய் என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேடி இணையத்தை கதிகலங்க வைத்தனர். அஜய் ராய் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக மோடியை எதிர்த்து போட்டியிகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக தகவலை வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi wins in Varanasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->