இதோ திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று! கிழித்தெடுத்த முதியவரின் வீடியோவை பகிர்ந்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக முதாயவர் ஒருவர் கண்டன கோஷம் எழுப்பிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி, திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று இதோ! திமுக அரசு எப்போது திருந்தும், சேவை பெறும் உரிமை சட்டத்தை எப்போது கொண்டு வரும்? என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து 8 ஆண்டுகளாக அலைந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான முதியவரின் குமுறல். ஏழை மக்களின் இத்தகைய குமுறல் ஆட்சியாளர்களை  விரட்டியடிக்கும்.

எந்த ஒரு சேவையையும் குறித்த காலத்திற்குள் மக்களுக்கு வழங்குவதற்கான சேவை உரிமை சட்டம் கொண்டு வருவதன் மூலம் தான் இத்தகைய மக்களுக்கு நீதி வழங்க முடியும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MKSTalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->