தூத்துக்குடி மாவட்ட விசிக ஆலோசனை...அம்பேத்கர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு!
Thoothukudi District VCK Consultation Ambedkar's birth anniversary to be celebrated with welfare schemes
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட விசிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பிறந்தநாள் விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் விசிக மத்திய மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர், வழக்கறிஞர் அணி குரு பிரசாத் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆட்டோ மா கணேசன் பேசுகையில்; சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, உத்தரவிற்க்கிணங்க, தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று, முதல் நிகழ்ச்சியாக விசிக மத்திய மாவட்ட அலுவலகத்தில் இருந்து இயக்கத் தோழர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும், பின்னர் மட்டக்கடை இரட்சணியபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
தொடர்ந்து கணேசபுரம் மற்றும் 3 சென்ட் அந்தோணியார் புரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். மேலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள 30 வார்டுகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு விசிக முகாம் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என ஆட்டோ கணேசன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கணேசபுரம், மட்டகடை இரட்சணியபுரம், 3 சென்ட், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதி விசிக நிர்வாகிகள் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர். முன்னதாக மறைந்த விசிக மூத்த நிர்வாகி சிறுத்தை குமார் மறைவுக்கு மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் முருகன், வில்சன், 3 சென்ட் அந்தோணிசாமி, பட்டு வளவன், ஜீவக்கனி, சந்தனகுமார், தமிழ்குமனன், ஆறுமுகம், மாடசாமி, தேவநேசம் மற்றும் போல்டன் புரம், இரட்சணியபுரம், சத்யா நகர், கருணாநிதி நகர், திரேஸ்புரம், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ் மாணிக்க புரம் உள்ளிட்ட முகாம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட சமூக ஊடக மையம் முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.
English Summary
Thoothukudi District VCK Consultation Ambedkar's birth anniversary to be celebrated with welfare schemes