திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகர் பகுதியில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை புறநகர் சுற்றியுள்ள பகுதியில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டார். அதனடிப்படையில் திருவள்ளூர் நகர் பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வரும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக திருவள்ளூர் வட்டத்தில் பெரியகுப்பம், திருத்தணி வட்டத்தில் இந்திரா நகர்,  நேரு நகர் , பூந்தமல்லி வட்டத்தில் அயனம்பாக்கம் அண்ணா நகர் 4 வது தெரு  போன்ற பகுதிகளில் வருவாய்த்துறை அலுவலர்களால் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் ( திருவள்ளூர்) தீபா (திருத்தணி) , உதவி ஆணையர் கலால் கணேசன் வட்டாட்சியர்கள் ரஜினிகாந்த் (திருவள்ளூர்), மலர்விழி (திருத்தணி), சரஸ்வதி (பூந்தமல்லி) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Survey work for issue of free house site pattas in Tiruvallur District District Collector M. Prathap inspects


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->