கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு..!
geographical indication to betel leaf
ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்திலும் தனித்தன்மை கொண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படுகிறது. இதனால், அந்த பொருட்கள் சர்வதேச அளவில் பிரபலமாகிறது. அந்த வகையில் 195 இந்திய பொருட்களுக்கு இதுவரைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது.
இந்த பகுதியில் வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களை வைத்துக் கட்டப்படும் மாணிக்கமாலைக்கு கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
geographical indication to betel leaf