கள்ளக்குறிச்சி விவகாரம் : பாமக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் நாமக்கல்லில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று, துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து கோவையில் காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்து ராம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை " கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதையடுத்து, பாஜகவினர் ஜூன் 24 அன்று தமிழக ஆளநரை சந்தித்து முரையிட உள்ளோம். மேலும் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கள்ளக்குறிச்சி திமுக எம்எல்ஏக்கள் இருவரை கண்டித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கும் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK And BJP Demonstration For Kallakurichi Hooch Tragedy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->