தமிழகத்தில் மும்முனை தாக்குதல் நடக்கிறது - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "தமிழகத்தின் இளைஞர்கள் மீது மும்முனை தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் சூது (ஆன்லைன் ரம்மி), மூன்றாவதாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கம் என்று தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் தான் இது போன்ற போதை கலாச்சாரங்கள் இருக்கும். ஆனால் அதையும் மிஞ்சி தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் கஞ்சா கிடைக்கக்கூடிய நிலைமை உள்ளது. கஞ்சா மட்டும் அல்லாமல் மற்ற போதை பொருட்களும் கிடைக்கின்றன. 

இந்த போதைப்பொருள் பிரச்சனை தற்போது திடீரென்று முளைத்தது இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொடங்கி, தற்போது அது உச்சத்தில் நிற்கிறது. அண்மையில் விழுப்புரத்தில் தலைமை ஆசிரியரை ஒரு மாணவன் தாக்கியிருக்கிறான்.

காரணம் கஞ்சா போதைக்கு அடிமையான 10 மாணவர்களை மறுவாழ்வு மையத்தில் அவர் சேர்த்த காரணத்தினால் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. கஞ்சா கொடுப்பதற்கு காசு தரவில்லை என்று தாய் மீது மகன் தாக்குதல் நடத்துகிறான். இப்படி ஒரு மோசமான நிலை தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. 

நான் பாமகவின் தலைவரானபின் தமிழக முதல்வரை சந்தித்தபோது வைத்த முதல் கோரிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இந்த கஞ்சா போதை பழக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும். இது குறித்து நீங்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போதைய நிலையில் ஒரு நாள் முழுக்க இதனை கையில் எடுத்து, எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இந்த போதை பழக்கத்தில் இருந்து தமிழகத்தையும் இளைஞர்களையும் காப்பற்ற முடியும்" என அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss say about TamilNadu Youngsters Futures


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->