திமுக கவுன்சிலர் புருஷனான, கள்ளசாராய வியாபாரியை கொஞ்சி குலாவிய செஞ்சி மஸ்தான்! கருப்பு கொடி ஏந்தி சம்பவம் செய்த பாமகவினர்! - Seithipunal
Seithipunal


கள்ளச்சார வியாபாரியும், திமுக பெண் கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜாவை கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவாத குறையாக உறவாடிய திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான், மருவூர் ராஜா பாமகவை சேர்ந்தவர் என்று திசை திருப்பும் முயற்சிகள் ஈடுபட்டதை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13 ஆம் தேதி விஷச்சாராயம் குடித்து சுமார் 60க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து இதுவரை 17 பெண்கள் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கியமாக திமுக அமைச்சருடன் (செஞ்சி மஸ்தான்) பிறந்தநாள் கொண்டாடுவதும், புகைப்படம் எடுப்பதும், கொஞ்சுவதும், குலாவுதுமாக இருந்த, திண்டிவனம் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த திமுக பெண் கவுன்சிலர் திமுக எம்பி கனிமொழிக்கு கூட அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், கள்ளச்சாராய வியாபாரியுடன் உங்களுக்கு என்ன தொடர்பு என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே மருவூர் ராஜா பாமகவில் இருந்தார். அவர் பாமகவினருக்கு நெருக்கமானவர். அவர் அண்ணா திமுகவில் இருந்தார் என்று திசை திருப்பும் வகையில் அவதூறாக பேட்டி அளித்திருந்தார்.

இதனால் கொந்தளிப்படைந்த பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர், இன்று செஞ்சி மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

திண்டிவனம் அருகே நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த செஞ்சி மஸ்தானுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர்.

போலீசாரின் பாதுகாப்பையும் மீறி செஞ்சு மஸ்தானுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பலமணி நேரம் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMKblack flag protest against senji masthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->