உக்ரைன்-ரஷ்ய போரில் யாருக்கு வெற்றி? பிரதமர் மோடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,

"இந்திய-ஜெர்மனி நட்புறவில் புதிய தொடக்கம் உருவாகியிருக்கிறது. ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. கொரோனா பெருந்தொற்று போரில் வெற்றி முக்கியமல்ல. அனைவரும் இதில் ஈடுபடவேண்டும். அமைதியாக இதை எதிர்கொள்ள வேண்டும்.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு. இந்தப் போரில் யாரும் வெற்றி பெற போவதில்லை இன்று நாங்கள் நம்புகிறோம். இந்த மோதலால் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. 

இந்த பொருளாதார நிலையை மிக உன்னிப்பாக இந்தியா கவனித்துக் கொண்டிருக்கிறது. மற்ற நட்பு நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை எப்படி எட்ட வேண்டும் என்பதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ், "உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன், உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்" என்று ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi say about ukrain russia war issue april


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->