சென்னை மாநகர தேர்தல் பாதுகாப்பு பணியில் 18,000 காவலர்கள்.! - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், 18,000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உள்ளாட்சித் தேர்தலுக்காக, சென்னையின் 200 வார்டுகளிலும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகவும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவைகளாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருப்பதகவும், தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இதுப்பதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police force increased in Chennai for local body election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->