சாலையோர அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. அதே சமயத்தில், அதிமுக பிரமுகர்கள் இருவர், கூடல்புதூரில், பை-பாஸ் சாலையில் கொடிக்கம்பம் நட அனுமதி கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இன்று தீர்ப்பு வழங்கினார். பொது இடங்களில் கட்சி, இயக்கம், மதம், சாதி சார்ந்த கொடிக்கம்பங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், போக்குவரத்து இடையூறுகள் மற்றும் விபத்துகளுக்கு வழிவகுப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். 

மேலும், கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அதிக உயரத்தில் கொடிக்கம்பங்கள் அமைப்பது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்த நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி, சாதி சங்க கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். 

அகற்ற தவறினால், அரசு அவற்றை அகற்றி செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பம் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்கக் கூடாது.

பட்டா இடங்களில் கம்பம் அமைப்பது குறித்து அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல்களின்போது, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியுடன், வைப்புத் தொகை மற்றும் வாடகை பெற்றுக்கொண்டு கொடிக்கம்பம் நட அனுமதி வழங்கலாம்.

இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்ப வேண்டும். உத்தரவு செயல்படுத்தப்படுவதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political parties Flag HC Madurai Bench 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->