மனுதர்ம எரிப்பு போராட்டம்.. பாஜக பிரமுகரின் மண்டையை உடைத்த தி.கவினர்.! உண்டான பதற்றம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தின் காமராஜர் சாலையில் திராவிட கழகத்தினர் மனு தர்ம நூல் எரிப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் பங்கேற்றனர். 

அப்பொழுது இந்த நிகழ்வுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்யும் நோக்கத்தில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று 25க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பதவியை ராஜினாமா செய்த பாஜக சட்டப்பேரவை தலைவர்.! - Seithipunal

அவர்கள் மனு தர்ம எரிப்பு போராட்டத்தை தடுக்க முயற்சித்த பொழுது பாஜகவினர் மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் செருப்புகள் மற்றும் கற்களை வீசி தாக்க ஆரம்பித்துள்ளனர். 

இதன் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த ஒரு நபரின் மண்டை உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pondicherry dk vs bjp violence issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->