#BigBreaking || தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு.. சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை.!
Pongal Gift 2022
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்து இருந்தார்.
21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு , மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
இதற்கிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.1000 பணத்தை சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதிப்படுத்தும் விருத்தமாக சற்றுமுன் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொங்கல் தொகுப்பு உடன் ரொக்க தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு கூட்டுறவுத் துறையின் செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, பொங்கல் பரிசு தொடர்பாக கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தையை நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொடர்பாக கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தையை நீக்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வந்துள்ள புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.