"இந்திக்கார பய தெறிச்சி ஓடுவான்".. சீமானை குறி வைக்கும் பிரசாந்த் கிஷோர்.. திமுகவுக்கு நெருக்கடி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குவது குறித்தான விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை திமுகவுக்காக தேர்தல் பணியாற்றிய பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் நிதிஷ் குமாருக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். 

இந்த நிலையில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கு போடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பலர் பொய்யான வீடியோக்களை பரப்புவது உண்மைதான்.

ஆனால் அதற்காக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் அரங்கேற்றப்பட்ட உண்மையான வீடியோக்களை விரைவில் வெளியிடுவேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.

தமிழகத்தின் அரசியல் நிலவரத்தையும் திமுகவையும் பற்றி நன்கு அறிந்திருந்த பிரசாந்த் கிஷோர் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை கையில் எடுத்திருப்பதும் அது தொடர்பான வீடியோவை வெளியிடுவேன் என கூறியிருந்ததும் திமுகவை கதி கலங்க செய்தது. இதனால் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வட மாநில தொழிலாளர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்த வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்கவில்லை, சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தமிழக காவல்துறை தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் பேசிய வீடியோவை பிரசாந்த் கிஷோர் வெளியிடுவாரோ என்ற அச்சம் திமுகவில் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prashant Kishore questions why Seeman was not arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->