அந்த 2 மாநிலமும் மண்ணை கவ்வுவது நிச்சயம்.! காங்கிரசுக்கு மணி அடிக்கும் பிரசாந்த் கிஷோர்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் வளர்ந்து வரும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த ஒரு மாதமாக காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக ஹர்திக் பட்டேல் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மேலும் விரைவில் நடக்க உள்ள குஜராத் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஹர்திக் பட்டேல் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து, களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் முடிவிலும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. 

இந்நிலையில், குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பலரும் என்னிடம் கருத்து கேட்டனர். தபோது இருக்கும் நிலையே தொடரும். அது எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லைன.

அது தோல்வியடைந்துவிட்டது. மேலும், குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்திக்கும். அதுவரை காங்கிரஸ் தலைமைக்கு அவகாசம் வழங்கியுள்ளது. இதுவே எனது பார்வை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prashant Kishore Say About Gujarat Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->