குடியரசு தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். 

அதில், "நம் நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக ஜனநாயக ஆட்சியின் வெற்றி குறித்து பல சர்வதேச தலைவர்கள், நிபுணர்கள் சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆனால், நாம் அதனை தவறென்று நிரூபித்தோம். 

தற்போது நம் நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, பெண்கள் தடைகளை உடைத்து முன்னேறி வருகிறார்கள். 

தேசிய கல்விக் கொள்கை நம் எதிர்கால தலைமுறையை தொழில் புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்தும். கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது. 

சொந்த வீடு என்பது ஏழைகளுக்கு இனி கனவாக இருக்காது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தால் அது நனவாகி வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவரின் வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிப்பதே சுதந்திர தினத்தின் முக்கியமான அம்சம்.  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupadi Murmu wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->