#BREAKING : குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் - தீர்மானம் நிறைவேற்றிய மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி, இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த வகையில், தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், ஆம் ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்

மேலும், பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். இது நல்ல தொடக்கம். பல மாதங்கள் கழித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோன்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நாங்கள் மீண்டும் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President election alliance discussion mamtha Banerjee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->