இளைஞர்களின் முயற்சிக்கு என்றுமே துணை நிற்கும் பாரதப் பிரதமர் மோடி.! இலக்கிய விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு! - Seithipunal
Seithipunal


சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் இலக்கியப் பிரிவில் சரஸ்வதி சம்மான் விருது பெற்ற சிவசங்கரி என்பவருக்கு வானவில் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தையும் தன்னுடைய வாசிப்பு அனுபவங்களையும் அரங்கில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மதுரையில் பிறந்த நான் திருச்சியில் கல்வி பயின்றேன். எனது தாயார் எந்த ஊருக்கு சென்றாலும் நூலகமிருக்கும் இடத்தை பார்த்து வைத்து விடுவார் அங்கு சென்று புத்தகங்களை வாங்கி படிப்பார். பின்னர் அதுவே எனக்கும் பழக்கமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

நாடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான கருத்தாக நமது எழுத்துக்கள் இருக்க வேண்டும் என பேசிய அவர் மனிதனை மனிதன் நேசிக்கின்ற அளவிற்கு தான் எழுத்து இருக்க வேண்டும் வெறுக்கின்ற அளவிற்கு இருக்கக் கூடாது. கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை தான் பிரதமர் மோடி பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.

சுயசரிதை தொடர்பான புத்தகங்கள் தனக்கு விருப்பமான ஒன்று என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன் மோடி அவர்கள் இளைஞர்களின் புதுமையான முயற்சிகளுக்கு அதிகம் உதவி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தைச் சார்ந்த ஜிடி நாயுடு தான் பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் எனவும் அந்த கூட்டத்தில் பேசினார் நிர்மலா சீதாராமன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi always supports the innovative ideas of youths nirmala seetharaman speech at literature function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->