உதயநிதியின் கருத்துக்கு இந்தியா கூட்டணியில் வலுக்கும் எதிர்ப்பு!! - Seithipunal
Seithipunal


உதயநிதியின் கருத்துக்கு இந்தியா கூட்டணியில் வலுக்கும் எதிர்ப்பு!!

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் உதயநிதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான தத்துவம் தான் சனாதன தர்மம். அடையாளத்தை அழிக்க படையெடுப்பாளர்கள் நடத்திய தாக்குதலையே சனாதனவாதிகள் தாக்குப்பிடித்தனர். ஏன் மீண்டும் எழுந்து வந்தனர். 

இந்த நாட்டின் அடித்தளம், சனாதனத்துடன் தொடர்புடையது. அனைவரையும் உள்ளடக்கியது. அந்த சந்தானத்திற்கு எதிராக யார் அவதூறு கருத்து பரப்பினாலும், அவர்களுக்கு சனாதனம் பற்றி புரிதல் இல்லை என்று தான் அர்த்தம்" இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

priyanga sadhurvedi post against minister udhayanithi stalin for sanatanadharma


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->