மத நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி எழுதிய அவசர கடிதம்..!
priyanka gandhi says religious institutions can use congress volunteers
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, " கொரோனா வைரஸ் எதிர்ப்பு நல பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்கிய தன்னார்வ குழுவை பயன்படுத்தி கொள்ளுங்கள்." என்று மத நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், "கொரோனா வைரஸ் நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது. ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பொது மக்களுக்கு தங்கு தடையில்லாத உணவு சப்ளையை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து இருக்கின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு பசி, தாகத்தோடு திரும்பி வருகின்றனர். மக்கள் வேலையை இழந்துள்ளனர். பணியாளர்களின் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் நின்று விட்டது.
எனவே, உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் குழுவை அமைத்து இருக்கின்றேன். உங்களுக்கு நலப்பணிகளை மேற்கொள்ள தன்னார்வ தொண்டர்கள் தேவைபட்டால் எங்களுடைய மாவட்ட குழுவை தொடர்பு கொள்ளுங்கள்." என்று அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
priyanka gandhi says religious institutions can use congress volunteers