சேலம் தொகுதி "திமுக வேட்பாளருக்கு" ஆப்பு.!! வேட்பு மனுவால் பதறும் அறிவாலயம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது அந்த வேட்பு மனுதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

அதன்படி சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வ கணபதியின் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் வடக்கு மற்றும் சேலம் மேற்கு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் அவர் வாக்களித்திருப்பதும் தற்போது சேலம் வடக்கு தொகுதிக்கு குடி பெயர்ந்ததும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்வகணபதி வேட்பு மனு தாக்கலையின் போது தனக்கு இரண்டு இடத்தில் வாக்குரிமை இருப்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டும் அவ்வாறு குறிப்பிடாத பட்சத்தில் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Problem in Salem DMK candidate selvaganapathi nomination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->