பாதியில் வெளியேறிய பி.டி.ஆர்.. ஆடியோவால் குழப்பமா..? அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முடியும் முன்பே நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டு சென்றாரா..?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 12:15 மணி வரை நீடித்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 11:45 மணி அளவில் வெளியேறியுள்ளார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோக்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் திமுகவில் பெரும் புயலை கிளப்பியது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆடியோவில் திமுக என்றாலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முதல்வரின் மருமகன் சபரீசனம் தான் என பதிவாகி இருந்தது.

மேலும் இவர்கள் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளதாகவும், அதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் முழிப்பதாகவும் முதல் ஆடியோவில் பேசப்பட்டிருந்தது. மேலும் திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை எனவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பியது.

இந்த நிலையில் ஆடியோகள் குறித்து விளக்கம் அளித்திருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அது தன்னுடைய குரல் இல்லை என்றும், செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் மறுப்பு தெரிவித்து இருந்தார். இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நீதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்தார்.

குறிப்பாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் அதனை ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடியும் முன்பே நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறி இருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து ஆலோசரிக்கப்பட்டதால் வெளியேறினாரா? அல்லது சொந்த காரணங்களுக்காக வெளியேறினாரா.? என்பது தெரியவில்லை. அமைச்சரவை கூட்டம் நடைபெறும் முன்பு இன்று காலை உங்களின் ஒருவன் நிகழ்ச்சியில் பி.டி.ஆர் ஆடியோ குறித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என பதிலடி தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTR left before cabinet meeting finish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->