பதவி தப்புமா..? நாளை அமைச்சரவை கூட்டம்.. முதல்வருடன் இன்று பி.டி.ஆர் திடீர் சந்திப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்கள் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்களை வெளியிட்டார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக பி.டி.ஆர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அது தன்னுடைய ஆடியோ இல்லை என தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஒரிஜினல் ஆடியோ என்னிடம் உள்ளது. நீதிமன்றம் சென்றால் அந்த ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே..? எப்போது..? யாரிடம்..? பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படலாம் என்ற செய்தி வெளியானது. வரும் மே 10ம் தேதிக்கு மேல் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சைக்கு இடையே இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டு தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என்ற செய்தியும் கடந்த சில நாட்களாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு வடபழனி முருகன் கோயிலில் நீண்ட நேரம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ததும் பேசும் பொருளானது. இதனால் பழனிவேல் தியாகராஜனின் நிதி அமைச்சர் பதவி தப்புமா என்ற கேள்விக்கு ஓரிரு நாட்களில் விடை தெரியும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTR meet CM today as Cabinet meeting is scheduled tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->