புதுவையில் ஆட்சியை கலைக்கிறாரா ரங்கசாமி? கொறடா அறிவிப்பால் அதிரும் புதுச்சேரி!
Puducherry political crisis NR congress vs BJP
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்திய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜக எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். கூட்டணி தர்மத்தை மீறி பாஜக செயல்படுவதால், என்.ஆர்.காங்கிரஸ் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது என முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் மோதல் முற்றியுள்ள நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் வந்தவுடன் பேசி முடிவெடுக்கப்படும் என அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் தெரிவித்திருக்கிறார்.
English Summary
Puducherry political crisis NR congress vs BJP