#தமிழகம் | கிராமசபை கூட்டத்திலேயே பதவியை ராஜினாமா செய்த இரு உறுப்பினர்கள்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறி, இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் கிராமசப கூட்டத்திலேயே விளக்கம் அளித்துவிட்டு, ராஜினாமா கடிதத்தை வழங்கியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராதா. இவர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு செய்துள்ளதாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்து. மேலும், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரும் காசோலையில் கையெழுத்திட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில், இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராதாவின் மீது ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளித்துவிட்டு, தங்களது வார்டு உறுப்பினர்களின் பதவியை இருவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai vellore Grama sabha meet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->