மன்னிப்பு கடிதம்! லிஸ்ட் கொடுங்கள்... அதிமுக துணை பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால், கட்சியில் சேர்ப்பது குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்று, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே பி முனுசாமி தெரிவித்ததாவது, அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று செய்தி ஊடகங்களும், சில அரசியல் விமர்சகர்களும் தங்களின் சுயநலம் காரணமாக பேசி வருகின்றனர்.

அதிமுகவுக்கு இடையூறாக இருந்து, அதிமுகவை உடைக்க வேண்டும் என்று காவல் நிலையம், நீதிமன்றம் சென்றவர்கள், அதிமுகவுக்கு களங்கம் விளைவித்தவர்களை நீக்கி இருக்கிறோம். 

இப்படியான தவறு இழைத்தவர்களை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று, அதிமுகவில் எந்த சட்ட விதிகளும் இல்லை. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலம் முதலே தவறு செய்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

பின்னர் அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதனை பொதுச்செயலாளர் ஆலோசத்தை அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கலாம். ஒருவேளை அவர்கள் திருந்த மாட்டார்கள், மீண்டும் அதே தவறை தான் செய்வார்கள் என்று பொதுச்செயலாளர் முடிவெடுத்தால், அது அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

தற்போது மன்னிப்பு கடிதம் கொடுக்க தயாராக இருக்கும் நபர்களின் பெயர்களை நீங்கள் தெரிவித்தால், அது குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம். 

ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் சுயநலத்துடன் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார்கள். அவர்கள் கட்சியின் நலன் கருதி ஏதேனும் பேசினால் அது குறித்து நாங்கள் பதில் கூற முடிவு எடுப்போம் என்று கேபி முனுசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK KP munusamy say about ops sasikala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->