மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கு மனதார வருந்துகிறேன் - திமுக ராஜீவ் காந்தி!
DMK Raju Gandhi apologies to Congress for kamarajar
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து அவமரியாதை செய்யும் வகையில், திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி பேசியதற்கு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி தனது பேச்சுக்கு மனதார வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், "சில தினங்களுக்கு முன்பு “கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்த நான் பேசியது காங்கிரஸ் பேரியக்க தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது!!
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தினை தெரிவித்தார்கள்!!
பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ,குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை!
பெருந்தலைவர் காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து.
என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விசம பிரச்சாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுகவும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது.
நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Raju Gandhi apologies to Congress for kamarajar