தமிழ் வழி கல்வி போலிச் சான்றிதழ்: உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத சலுகை வழங்கப்பட்டதை எதிர்த்து, சத்திராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கான சலுகை வழங்கியது சட்டவிரோதம். இப்படி போலியான தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இதுவரை நிறைவேற்றாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சக்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

இன்று இதனை விசாரணை செய்த நீதிபதிகள், பல்கலைக்கழக தரப்பிலிருந்து ஆவணங்களை தர தாமதம் செய்வதால் விசாரணை குழு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இதுகுறித்து தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்க கூடிய நான்கு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறி, வழக்கின் விசாரணையை வருகின்ற 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High court division order Tamil education fake certificate issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->