அழுகிய முட்டை, அழுகிய தக்காளி, மாட்டுச் சாணம்! திராவிட விடுதலைக் கழகத்தின் புதுமை போராட்டம்!
Puduvai TVK protest Theni TVK
புதுச்சேரியில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் விசித்திரமான ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள சுவரொட்டியில், "ஒரு சதவீத இடபிள்யுஎஸ் உயர் சாதிக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து, புதுவை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பை பறிக்கும் சதிகார சார்புச் செயலாளர்கள் வாகனத்தை மரித்து முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது.
தோழர்கள் கவனத்திற்கு: அழுகிய முட்டை, அழுகிய தக்காளி, மாட்டுச் சாணம் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது.
போராட்டம் நடக்கும் இடம்: எங்கேயும் எப்போதும்" என்று அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட விடுதலைக் கழகத்தின் இந்த சுவரொட்டி, புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
***************************************
தேனி மாவட்டம், அல்லிநகரம் சமதர்மபுரம் பிடி ராஜன் சாலையில் எம்ஜிஆர் நகர் பொதுமக்களுக்கு பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டியை இடித்து தள்ளப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் துணையோடு இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்து விட்டதாக கூறி குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில், குடிநீர் தொட்டி இன்று இடம் பல கோடி மதிப்புள்ள அரசு நிலம் என்றும், இந்த நிலத்தை ஆக்கிரமித்து கோவில் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
திராவிட விடுதலைக் கழகத்தின் தேனி ராயன் மாவட்ட அமைப்பாளர் சந்திரன், உத்தமபாளையம் பொறுப்பாளர் சிவகுமார், தேனி நகர பொறுப்பாளர் சுருளி மற்றும் பெண்கள் விடுதலைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி தமிழரசி ஆகியோர்
English Summary
Puduvai TVK protest Theni TVK