அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது பெங்களூரு புகழேந்தி புகார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுகவின் விதிகள் மற்றும் சட்டத் திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டது, கட்சி பொறுப்புகள் மற்றும் செய்யப்பட்டது ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.

இவை நீதிமன்றத்தில் உத்தரவுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிடப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி கொள்ள எந்த உரிமையும் இல்லை.

அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க வேண்டாம். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களில் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளரும், இணைய ஒருங்கிணைப்பாளரும் தான் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் ஏ மற்றும் டி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளவர்கள்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்கள் மத்தியில் அவர் தான் அதிமுகவின் பொது செயலாளர் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pugazhenthi complaint against AIADMK EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->