பஞ்சாபில் ஒரே கட்டமாகவும், உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்டமாகவும் இன்று வாக்குபதிவு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்ட வாக்குப்பதிவும், உத்திர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும்இன்று நடைபெற  உள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 

மொத்தம் 117 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2.14 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பஜக உடன் கூட்டணியில் இருந்த ஷிரோன்மணி அகாலி தளம் கட்சி தனித்து களம் காண்கிறது. இது ஒருபுறம் இருக்க ஆம்.ஆத்மி கட்சியும் கடும் சவால் அளித்து வருகிறது. இவ்வாறு பலமுனை போட்டியுடன் இன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்

மொத்தம் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்திர பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 60.17 விழுக்காடும், 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 61 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் 18-ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. 2.15 கோடி வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதிகளில் மொத்தம் 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 245 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சமாஜ்வாடி கட்சியில் 52 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பாஜக வேட்பாளர்கள் 48 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 46 பேரும், காங்கிரஸ் கட்சியில் 29 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 18 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab and uttar Pradesh assembly election polling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->