பாஜக, காங்கிரசுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட மூத்த தலைவர்.!
Punjab Assembly Election Aam Aadmi cm candidate Kejriwal
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மன் களமிறங்க உள்ளதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல், ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநில சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
ஒரு பக்கம் பாஜக தலைமையிலான கூட்டணி, மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களமிறங்க, மூன்றாவதாக ஆம் ஆத்மி தலைமையில் ஒரு கூட்டணி அமைய உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மன் களமிறங்க உள்ளதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பெருமை அடைய செய்யக் கூடியவராக நான் இருப்பார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான பகவந்த் மன், மக்களின் அமோக ஆதரவை பெற்றவர் என்றும், போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட வாக்குகளில் 93 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பகவந்த் மான் பெற்றுள்ளார் என்றும் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள பகவந்த் மன் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Punjab Assembly Election Aam Aadmi cm candidate Kejriwal