எலுமிச்சம்பழத்தில் நவீன ஊழல்., சிக்கிய அதிகாரி சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் எலுமிச்சம்பழத்தில் ஊழல் செய்ததாக சிறை அதிகாரி ஒருவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் : காபுர்தலா பகுதியில் உள்ள நவீன சிறைச்சாலையில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் குர்நாம் லால். இவர் 50 கிலோ எலுமிச்சம்பழத்தை கைதிகளின் உணவுக்காக வாங்கியதாக போலி கணக்கு காட்டி, ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் வீதம் ஊழல் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நவீன சிறைச்சாலைக்கு சோதனை செய்ய வந்த மேல் அதிகாரிகள் குழு, சிறைவாசிகள் இடம், தங்களுக்கு வழங்கப்பட்ட கூடிய உணவுகள் குறித்து கேட்டறிந்தார். அதற்க்கு, தங்களுக்கு எலுமிச்சை பழம் வழங்கவில்லை கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ததில், 50 கிலோ எலுமிச்சம்பழத்தை வாங்கியதாக போலி கணக்கு காட்டி, கிலோவுக்கு 200 ரூபாய் ஊழல் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குர்நாம் லாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சிறைச்சாலையில் சமைக்கப்படும் சப்பாத்தி 50 கிராம் குறைவாக உள்ளதாகவும், இதன்காரணமாக கோதுமை மாவிலும் இவர் ஊழல் செய்து இருக்கலாம் என்று மேல் அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை காய்கறிகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை பதிவுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் சிறைவாசிகள் தங்களுக்கு காய்கறிகள் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறை அதிகாரி குர்நாம் லால் இடம் மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab jail official sacked for corruption in lemon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->