ஓடஓட இளைஞர் வெட்டி படுகொலை.! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் மோக என்ற பகுதியில், இளைஞர் ஒருவரை முன்பகை காரணமாக மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராஜ் என்ற இளைஞரை விரட்டி உள்ளது.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடியுள்ளார். அப்போது பின்னால் தொடர்ந்து வந்த அந்த கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசார் தரப்பில் போலீசார் தரப்பில் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab young man murder cctv video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->