மார்பில் அடித்து., ஒப்பாரி வைத்து., தமிழக அரசின் மதுபான கடையை இழுத்து மூடிய வீர தமிழச்சிகள்.!
Puthukottai KulathurNayakkarpatti TASMAC Shop Closed
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பொதுமக்கள் மற்றும் பெண்களின் போராட்டத்தினால் டாஸ்மார்க் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை அடுத்த குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழக அரசின் மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த போராட்டங்கள் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மது கடையை மூடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் மக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.
ஆனால், தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்கி வந்ததால், அந்த கிராமத்தை சேர்ந்த பெண்களும், பொதுமக்களும் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், மார்பில் அடித்துக்கொண்டு, ஒப்பாரி வைத்தும் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தையை ஏற்று கொள்ளாமல் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதற்கும், 15 நாட்கள் கழித்து, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, கடையில் உள்ள மதுபானங்களை கொண்டு செல்வதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதால் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அப்போது தங்களின் போராட்டம் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் பெண்கள் ஒன்றாக கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
English Summary
Puthukottai KulathurNayakkarpatti TASMAC Shop Closed