தமிழக அரசின் மதுபான கடை விவகாரம்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடை விவகாரத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

சமூக காடுகளுக்கு அருகே தமிழக அரசின் மதுபான கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என்றும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிய இந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? இது குறித்து புதுக்கோட்டை எஸ்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆய்வு மேற்கொண்ட பின் அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மாற்று பாதையில் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் எஸ்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUTHUKOTTAI TASMAC SHOP ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->