ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் - காவல் துறை எடுத்த நடவடிக்கை என்ன?
ragul gandhi kill threat issue
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் - காவல் துறை எடுத்த நடவடிக்கை என்ன?
உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் லாலன் குமார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன் பின்னர், லாலன் குமார் கோரக்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் ராய் என்று நபருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ராகுல் காந்தியையும், தன்னையும் கொலை செய்து விடுவதாக மர்ம நபர் மிரட்டியதாகவும், இவர் கடந்த காலங்களில் தனக்கு இதுபோன்ற மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் தான் உயிர் பயத்தில் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மனோஜ் குமார் ராய் மீது சின்ஹாட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்துப் பேசிய லாலன்குமார், “நான் மார்ச் இருபத்தைந்தாம் தேதி அன்று சின்ஹாட் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் சம்பவம் குறித்து புகார் அளித்தேன்.
ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனக்கு ஏதாவது விபத்து நேரிடும் என்று போலீஸார் காத்திருப்பது போன்று தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ragul gandhi kill threat issue