திடீர் திருப்பம்.. சோனியாவின் தொகுதியில் களமிறங்கும் ராகுல்.. பரபரக்கும் தேர்தல் களம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ரேபரலி தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது ‌ 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் எனவும் அமைதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவார் எனவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதில்லை எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்த தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi contest in Rae bareli constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->