முதல் முறையிலேயே அம்மாவை மிஞ்சிய மகன்.. ரேபரேலியில் சோனியாவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ள ராகுல் காந்தி..!! - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரசின் இந்தியா கூட்டணி கடுமையான போட்டியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை பாஜக கூட்டணி கட்சிகள் 296 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

பாஜக மற்றும் காங்கிரஸ் என்ற இருபெரும் கட்சிகளும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. இந்நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய காட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் உத்திரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டார். வயநாடு தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

மேலும் ரேபரேலியில் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காணும் ராகுல் காந்தி அங்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலில் 1.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி அங்கு வென்றார்.

தற்போது தாயை மிஞ்சிய தனயனாக ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Got More Votes Than Sonia on His First Attempt in Rebareli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->