தரக்குறைவான, முட்டாள்தனமான... மிஸ் இந்தியா விவகாரத்தில், ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!
Rahul Gandhi Miss India statement BJP Narayanan replay
மிஸ் இந்தியா விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து வன்மமான கருத்து என்று, பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில், மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றவர்கள் பட்டியலில், பட்டியல் இன மற்றும் பழங்குடியின பெண்கள் உள்ளார்களா என்று தேடிப் பார்த்ததாகவும், ஆனால் பட்டியல் இன மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த யாரும் இல்லை என்று, ராகுல் காந்தி கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு, பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்த அவரின் அந்த செய்தி குறிப்பில், "இதை விட தரக்குறைவான, முட்டாள்தனமான, வன்மமான கருத்து இருக்க முடியாது.
இந்த நாட்டை ஜாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கும் இழிசெயல் இந்த நபரின் முயற்சி. 15 வருடங்கள் தன் குடும்பம் ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதால் ஏற்பட்ட விரக்தியில் சமுதாயத்தை சீர்கெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ஜாதி வெறியை தூண்டி விட்டு தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நபர் சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.ஜாதி ரீதியாக, மத ரீதியாக இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்ற நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi Miss India statement BJP Narayanan replay