பீஹாரில் பாதயாத்திரை சென்ற ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதலால் பாப்பரப்பு..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று பீஹார் சென்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். இதையடுத்து, பெகுசாரி மாவட்டத்துக்கு ராகுல் சென்றார். அங்கு, 'புலம் பெயர்வதை நிறுத்து; வேலை கொடு' என்ற பெயரில் பாதயாத்திரையில் பங்கேற்றார்.

இந்த யாத்திரையை தொடர்ந்து பாட்னாவில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்ற ராகுல் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து ராகுல் புறப்பட்டதும் இரண்டு கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ்  எம்.பி., அகிலேஷ் பிரசாத் முன்பாகவே கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், சண்டை போட்டவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi Padayatra in Bihar Clashes between Congress party members turn violen


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->