அரசியலை வென்ற அம்மாவின் பாசம்! யாத்திரையில் ராகுல் காந்தியின் செயலால் நெகிழ்ச்சி! வீடியோ! - Seithipunal
Seithipunal


தேசிய கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மிக பலவீனம் அடைந்த நிலையில், அதனை பலப்படுத்தும் விதமாக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை இந்தியா யாத்திரை நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடத்தி வருகிறார். 

தமிழ்நாடு கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடை பயணத்தில் அவருடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி பங்கு பெற்றார். ராகுல் காந்தியுடன் தொடர்ந்து சோனியா காந்தி நடந்து வந்தார். 

அவர் சில கிலோ மீட்டர் நடந்தவுடன் அவரை தடுத்து நிறுத்திய ராகுல் காந்தி, காரில் வருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நான் தொடர்ந்து நடப்பதாக சோனியா காந்தி கூறியும், அவர் அதனை ஏற்கவில்லை. என்னதான் அரசியலுக்காக இந்த பயணம் என்றாலும், அரசியலை விட அம்மாவின் அன்பே இறுதியில் வென்றது. 

தனது அம்மாவின் வயதையும் உடல் நிலையும் கவனத்தில் கொண்டு ராகுல் காந்தி அவரை வாகனத்தில் வருமாறு வலியுறுத்தி, வாகனத்தில் ஏற்றிவிட்டு தனது நடை பயணத்தை தொடர்ந்து கொண்டு கொண்டிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul gandhi stop sonia and send to continue by car Bharat Jodo Yatra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->