மக்களவை தேர்தல் முடிவுகள் : ரேபரேலில் ராகுல் காந்தி வெற்றி!! - Seithipunal
Seithipunal


ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் ராகுல் காந்தி 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் மகரவே தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் மூன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.


மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியலும் கட்சிகளும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்துகள் சர்சையானது. பாஜக கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் பிரச்சாரத்தில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று 18-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வயநாடு மற்றும்  ரேபரேலி இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் 6,84,261 வாக்குகள் பெற்று மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi victory in Raebareli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->