பாஜக - சிபிஎம் (மார்க்சிஸ்ட்) இடையே ஒரு புரிந்துணர்வு உள்ளது - ராகுல்காந்தி.!
rahul say about cpim
கேரளா : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாட்டில் தமது மக்களவைத் தொகுதி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து மலப்புரம் பகுதியில் இன்று கேரள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,
"மத்திய அமலாக்கத்துறை 5 நாட்கள் என்னிடம் விசாரித்தபோது, அதை நான் கவுரமாக நினைத்து கொண்டேன். இன்னும் ஒரு 10 நாட்கள் விசாரணை இருக்கலாம் என்று தோன்றியது . அவர்கள் அப்படி செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இதுவே, பினராயி விஜயனுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தாது, காரணம் பாஜக மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட்) இடையே ஒரு புரிந்துணர்வு உள்ளது.
மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டின் கட்டமைப்பை அழிக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் நாங்கள் பயப்படவில்லை, நமது அரசியல் சாசனத்தை பிஜேபி, ஆர்எஸ்எஸ் கைப்பற்ற பார்க்கிறது.
சிபிஎம் கட்சி என்னுடைய அலுவலகத்தை உடைப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறது. அவர்கள் இதனை எத்தனை முறை சேதப்படுத்தினாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
பா.ஜ.க, சிபிஎம் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இந்த இரு கட்சிக்கும் தைரியம் இல்லை, அவர்கள் செய்யும் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று ராகுல்காந்தி பேசினார்.