போதுங்க, மக்கள் சோர்ந்து போய்ட்டாங்க... பிரதமரின் வார்த்தையை வைத்தே விமர்சித்த ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


நாட்டில் எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவின் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை அவரது 125 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக திறந்து வைத்தார்.

அந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், "அல்லூரி சீதாராமராஜூ ஆங்கிலேயர்களை எதிர்த்து 'தைரியம் இருந்தால் என்னைத் தடுங்கள்' என முழுக்கமிட்டார். நாட்டு மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களை அவர் கூறிய அதே முழுக்கத்தோடு வீரமாக சந்தித்து வருகின்றனர்" என்று பேசி இருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

"133 கோடி மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுங்கள் என வீரமாக கூறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் கீழ் உள்நாட்டில் சிலிண்டர்களின் விலை 157 சதவிகிதம்  அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் மக்கள் இந்த சவால்களை எல்லாம் உருவாக்கியது பிரதமர் தான் என கூறி வருகின்றனர். மேலும், மக்கள் சோர்வடைந்து விட்டனர். இதை நிறுத்துங்கள்". என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahulganthi say about pm modi july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->