மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal



சோழப் பேரரசர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா காரணமாக, தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தார். அந்த நாள் அவருடைய பிறந்த நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, அரசு சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாட இருக்கிறது. 

இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதிஅரசு விழாவாக கொண்டாடப்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


நிகழ்ச்சி நிரல் : இன்று (2-ந்தேதி) ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. 

இதையடுத்து, நாளை நவம்பர் 3-ந் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகளும், ஓதுவார்களின் வீதியுலாவும் நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RajaRajachozhan HBD Tamilnadu TNGovt MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->