#BREAKING || ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 9ம் தேதி ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மிசோரம் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 7ம் தேதியும், சட்டிஸ்கர் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதியை வரும் நவம்பர் 23ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்கு மாற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது அசோக் கிலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற வரும் நிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan assembly election date change to Nov23


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->