காங்கிரஸ் பிளவு? தனி கட்சி? உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சச்சின் பைலட்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மோதல் எடுத்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இன்று காலை சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சி காலத்தில் செய்த ஊழல் விவரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது, சச்சின் பைலட் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூத்த தலைவரான அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் தலைமை முதலமைச்சர் வாய்ப்பை வழங்கியது. அப்போது முதல்  இருவருக்கும் இடையேயான மோதல் இருந்து வந்தது.

இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், சச்சின் பைலட் தனது சொந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் வருகின்ற இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சச்சின் பைலட் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் காங்கிரஸின் தேசிய தலைமை முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக விரக்தி அடைந்துள்ள சச்சின் பைலட், தனது ஆதரவாளர்கள் உடன் தனி கட்சியை விரைவில் ஆரம்பிப்பார், அதற்கான முன்னோட்டம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்று, சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Congress leader Sachin Pilot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->