தலைமை செயலகத்தில் கோடி கணக்கில் ரூ.2000 நோட்டுகள், தங்க கட்டிகள் சிக்கியது! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் ஆளக்கூடிய ராஜஸ்தான் மாநில அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், தங்கக் கட்டிகளும் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள யோஜனா பவன் கட்டடத்தின் அடித்தளத்தில், பூட்டப்பட்ட ஒரு அலமாரியில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில், தரை தளத்திற்கு அடியில் பூட்டப்பட்ட அலமாரியின்  உள்ளே சுமார் 2 கோடியை 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மீட்கப்பட்டன.

மேலும் ஒரு கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம் இருந்த இடத்தை கையாளக்கூடிய ஏழு அரசு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பிரதாப் சிங், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan secretariat building money scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->