சேலம், தேனி, சென்னை - ராஜேந்திர பாலாஜியின் பயணத்துக்கு பச்சை கொடி! - Seithipunal
Seithipunal


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். 

தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இதனை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் ராஜேந்திர பாலாஜி செல்லலாம். ஆனால், விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது, விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். 

மேலும், வெளிமாநிலங்களுக்கு செல்ல ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி இல்லை. பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendra balaji bail case new order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->